Friday, November 22, 2013

30 ஆண்டு கால புலிபயங்கரவாத யுத்தத்தின் போதும் அதனை இலங்கை அரசு வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்த போதும், இலங்கையைப் பற்றி குற்றஞ்சாட்ட பிரிட்டிஷ் பிரதமருக்கு என்ன தகுதி இருக்கிறது?

Friday, November 22, 2013
இலங்கை::30 ஆண்டு கால புலிபயங்கரவாத யுத்தத்தின் போதும் அதனை இலங்கை அரசு வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்த போதும் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச்சாட்டுகள் பற்றி எக்கருத்தையும் வெளியிடாத பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூன் திடீரென்று ஆழ்
ந்த துயிலில் இருந்து விழித்துக் கொண்டவர் போன்று தனது சமீபத்திய இலங்கை விஜயத்தின் போது இலங்கை அரசாங் கத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது டன் நின்றுவிடாமல் இவை பற்றி அரசாங்கம் சுயாதீன விசா ரணையொன்றை நடத்தாவிட்டால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஐக் கிய நாடுகள் அமைப்பின் மூலம் சர்வதேச விசாரணையொ ன்றை நடத்தும் என்ற காலக்கெடுவை விதித்துள்ளார்.

இலங்கை மீது யுத்தக்குற்றச்சாட்டுகளையும், மனித உரிமை மீறல் களையும் மேற்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஒருவருக்கு இப்படியான குற்றச்சாட்டுகளை எங்கள் நாட்டின் மீது விதிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்றே நாம் கேட்க விரும்புகிறோம்.

எமது இந்த வாதத்திற்கு ஆதாரமாக இலங்கையின் கடந்தகால வரலாற்றை நாம் திரும்பிப் பார்ப்பது அவசியமாகும். 1815ம் ஆண்டளவில் இலங்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் தனது இராணுவப் பலத்தை பிரயோகித்து ஆக்கிரமித்த காலகட்டத் தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச்சாட்டு களை பிரிட்டிஷ் பிரதமமந்திரி டேவிட் கெமரூனுக்கு நாம் இப்போது ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். தன் னுடைய பீரங்கிப் பலத்தையும், இராஜதந்திரத்தையும் சாதா ரண வார்த்தைகளில் கூறுவதானால் குள்ள நரியைப் போன்ற மதி நுட்பத்தை பயன்படுத்தி இந்நாட்டு மக்களிடையே ஒற்று மையின்மையை ஏற்படுத்தி நாட்டை ஆக்கிரமிக்கும் திட்ட த்தை நிறைவேற்றிய போது பிரிட்டிஷ் இராணுவத்தினரால் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

ஊவவெல்லஸ்ஸ யுத்தத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தினர் சிங்கள இளைஞர்களை ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுத் தள்ளியதுடன், துப்பாக்கிகளில் பொருத்தப்பட்டுள்ள பேனட் என்ற கூர் மையான ஆயுதத்தினால் உடல்களை குத்திக் குதறி படு கொலை செய்தனர். இத்துடன் நின்றுவிடாமல் ஊவவெல்லஸ் ஸவில் உள்ள 14வயதிற்கு கூடிய சகல ஆண்களையும் எவ் வித விசாரணையும் இன்றி பிரிட்டிஷ் இராணுவத்தினர் துடி துடிக்க சுட்டுக் கொன்றனர்.

இதனால், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள மக்களின் எதிர்ப்புகள் அடக்கப்பட்டன. அங்கிருந்து மாத்தளை இராச் சியத்தை பிடிக்கும் போதும் அதே பாணியில் பிரிட்டிஷ் இரா ணுவத்தினர் மக்களை மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுத் தள்ளினர். அதற்கு பின்னர் தந்துரே யுத்தத்திலும் பிரிட்டிஷார் மனித உரிமை மீறல்களை செய்ததுடன் யுத்தக் குற்றங்களை யும் புரிந்தனர்.

இறுதியில் முல்லேரியாவிலும் சிங்கள மாவீரர்களின் படைகளை பிரிட்டிஷார் ஈவிரக்கமற்ற முறையில் துவம்சம் செய்ததுடன் நின்றுவிடாமல் அங்கிருந்த பொதுமக்களையும் படுகொலை செய்தனர். அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த கத்தோலிக்கர்களும் பிரிட்டிஷ் இராணுவத்தினரால் துன்புறுத்தி கொல்லப்பட் டனர். 1505ம் ஆண்டில் இலங்கையை முதன் முதலில் ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் இலங்கைக்கு கத்தோலிக்க மதத்தை அறிமுகம் செய்து, அவர்கள் ஆக்கிரமித்த கரையோர பிரதேசங்களிலும் ஏனைய பகுதிகளிலும் கத்தோலிக்க தேவால யங்களை நிர்மாணித்தனர்.

பிரிட்டிஷார் கத்தோலிக்க மதத்தை எதிர்க்கும் புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால் அன்றைய ஆரம்ப காலத் தில் கத்தோலிக்கர்களையும் விரட்டி, விரட்டி அடித்துக் கொன்றனர். 1815ல் கண்டி இராஜதானியை ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னனிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிய போது அவர்கள் தங்களை நம்பி வந்த சிங்கள சேனாதிபதிகளுக்கும் துரோ கம் இழைத்து அவர்களை சிரச்சேதம் செய்தனர்.
அதுபோன்று கண்டியைச் சேர்ந்த சிங்கள மாவீரர் கெப்பட்டி பொலவும் சிரச்சேதம் செய்யப்பட்டு அவரது மண்டை ஓட்டை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். தாய்நாட்டுக்காக தன்னுயிரையும் மதிக்காமல் பிரிட்டிஷாரை எதிர்த்த சிறுவன் மத்தும பண்டாரவையும் மிலேச்சத்தனமாக பிரிட்டிஷார் கொலை செய்தனர். இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கவையும் சிறைப்பிடித்து அந்த மன்னனை இந்தியாவுக்கு கைதியாக அழைத்துச் சென்றனர்.

இத்தகைய யுத்தக் கொடுமைகளையும் மனித உரிமைகளையும் மீறிய ஆங்கிலேயரின் சந்ததியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரதம மந்திரிக்கு எங்கள் நாட்டை பற்றி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறதென்று கேட்க விரும்புகிறோம். இனிமேலாவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எங்களுக்கு செய்த கொடுமைகளை நிறுத்தி எங்கள் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ இடமளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment