Sunday, November 17, 2013

தென்கொரியா:ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகள் பலி!

Sunday, November 17, 2013
சியோல்::தென்கொரிய தலைநகர் சியோலில் அடுக்குமாடிக் குடியிருப்பு மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பலியானார்கள்.
 
தென்கிழக்கு சியோல், கங்னம் மாகாணத்திலுள்ள மின்சாதன பொருள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவன ஊழியர்களை, வேலைக்காக மற்றொரு நகரத்துக்கு அழைத்து வர ஹெலிகாப்டர் ஹெலிகாப்டர் சென்றது. அப்போது ஹெலிகாப்டரை சியோலில் தரை இறங்கும்போது அருகிலுள்ள 38 மாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் தலைமை விமானி பார்க் இன் க்யூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துணை விமானி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment