Tuesday, November 19, 2013
இலங்கை::பிரிட்டிஷ் இராணுவம் 1972ம் ஆண்டில் வட அயர்லாந்தில் 13 பொதுமக்களை மிலேச்சத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றிய புலன்விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு 40 ஆண்டுகள் எடுத்தன.
இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தத்தில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி ஆய்வுநடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை இலங்கை மீது அநாவசியமான அழுத்தங்கள் கொண்டுவரும் பிரிட்டன் போன்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 17ம் திகதி பி.பி.சி. தொலைக்காட்சி சேவையின் செய்தியறிக்கையில் 1972ம் ஆண்டில் அயர்லாந்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டிக்கும் முகமாகவே பி.பி.சி. செய்தி தொகுப்பாளர்கள் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தாவிட்டால்இ ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை பேரவையின் ஊடாக சர்வதேச விசாரணையை நடத்த வேண்டுமென்று பிரிட்டிஷ் பிரதமர் வெளியிட்ட கருத்து குறித்து உச்சி மாநாட்டின் இறுதி நாளன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவி யலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கண்ணாடி வீடுகளில் இருப்பவர்கள் கல்லடிப்பது பண்பான செயலல்ல என்று கூறினார்.
ஜனாதிபதி அவர்களின் இந்தக் கருத்தை முன்வைத்து பி.பி.சி தொலைக்காட்சி சேவையின் செய்தி அறிக்கையில் இலங்கை ஜனாதிபதியின் இந்தக் கருத்து 1972ம் ஆண்டில் வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் இராணுவம் 13பேரை மிலேச்சத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறதென்று குறிப்பிடப்பட்டது.
வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் நிர்வாகம் சீர்குலைவதை தடுப்பதற்காக அங்கு பிரிட்டிஷ் இராணுவத்தை அனுப்பி வைத்ததன் மூலம் இராணுவம் மிலேச்சத்தனமாக 13பேரை அங்கு சுட்டுக் கொன்றது. இதுபற்றி விசாரணை செய்யக்கூடாதென்று விடுத்த அழுத்தங்களை அடுத்துஇ இந்த சம்பவம் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 2010ம் ஆண்டு ஜூன் 15ம் திகதியே வெளியிடப்பட்டது. இதன்படி இவ்வறிக்கை வெளிவருவதற்கு சுமார் 40 வருடங்கள் எடுத்தன.
இந்த அறிக்கை வெளிவரும் இன்றைய காலகட்டத்தில் 1972ம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தை மக்கள் மறந்தும் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டும் பி.பி.சி. செய்தி அறிக்கைஇ இலங்கைக்கு இவ்விதம் அழுத்தங்களை கொண்டுவருவது நியாயமற்ற செயல் என்றும் கண்டித்துள்ளது.

No comments:
Post a Comment