Monday, October 7, 2013

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை: கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!

Monday, October, 07 ,2013
ரொறொன்ரோ::இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளில் தான் கலந்துகொள்ளப்போவதில்லையென கனேடிய பிரதமர்  ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே தான் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தனக்கு பதிலாக கனேடிய சர்வதேச மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் கலந்துகொள்வார் எனவும் கனேடிய பிரதமர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையானது 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்ட போது, அது தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் என கனடா நம்பியதாகவும் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லையெனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment