Tuesday, October 8, 2013

அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிருதிவி சோதனை வெற்றி!

Tuesday, October 08, 2013
புவனேசுவரம்::இந்தியாவின் பாதுகாப்புக்காக பிருதிவி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இதில் பிருதிவி - 2 ரக ஏவுகணைகள் சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. 
 
பிருதிவி_2 ரக ஏவு கணைகள் ராணுவ பயன்பாட்டுக்கு சேர்க்கப்பட்டது. இந்த ரக ஏவுகணையில் சும்ஆர் 500 கிலோ முதல் 1000 கிலோ வரை எடை கொண்ட வெடி மருந்துகளை வைத்து பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ஏவுகணைகளில் அணு ஆயுதங்கள் பயன்படுத்த முடியும். 
 
இரட்டை  எஞ்சின்கள் கொண்ட பிருதிவி_2 ரக ஏவுகணைகள் அடிக்கடி சோதித்து பார்க்கப்பட்டு வருகின்றன. கடைசியாக கடந்த ஆகஸ்டு மாதம் 12_ம் தேதி பிருதிவி _2 ரக ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இந்த சோதனை நடந்தது. ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்தீப்பூரிலிருந்து அந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை நோக்கி நேற்று காலை 9.14 மணிக்கு தாக்கியது.
 
 இதன் மூலம் நேற்று நடந்த சோதனை வெற்றி அடைந்தது. பிருதிவி ஏவுகணை ராடார்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனை மூலம் எத்தகைய திடீர் போரையும் சந்திக்கும் திறமை இந்தியாவுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment