Sunday, October 20, 2013

அரசியல் கட்சிகள் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் வேண்டுகோள்!

Sunday, October 20, 2013
சென்னை::அனைத்து அரசியல் கட்சிகளும், பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்,'' என, அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் பிட்டா தெரிவித்தார்.
அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி சார்பில், சென்னை, தி.நகரில் உள்ள, தியாகராயர் அரங்கில், இன்று காலை, 10:30 மணிக்கு, காவலர் தின விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், நாட்டின் ஒற்றுமைக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் பாடுபட்டு, உயிர் தியாகம் செய்த, 12 பேருக்கு வீர விருது, அவர்களின் குடும்பத்திற்கு கவுரவ கோப்பை மற்றும் பண உதவி வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, சென்னை வந்துள்ள, அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் பிட்டா, நிருபர்களிடம் கூறியதாவது:
 
காவலர் தின விழா, 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாங்கள், 20ம் தேதி கொண்டாடுகிறோம். பயங்கரவாதத்தால் தினமும் பிரச்னை ஏற்படுகிறது. அதை நாட்டில் இருந்து, முற்றிலும் ஒழிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து, பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்.
 
பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன், பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அந்த நாட்டை பயங்கரவாத நாடாக, ஐ.நா., அறிவிக்க வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிடும் வரை, அந்த நாட்டுடன், கிரிக்கெட், ஹாக்கி என, எந்த விளையாட்டும் விளையாடக் கூடாது.
 
மெட்ராஸ் கபே' படத்திற்கான தடையை நீக்க வேண்டும். ராஜிவ் இறப்பதற்கு முன், அவருக்கு இருந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். இது தொடர்பாக விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment