Monday, October 28, 2013
சென்னை::தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 அப்பாவி மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 26-ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் தனுஷ்கோடி அருகில் மீன் பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மீனவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினர். அவர்களின் படகு சேதம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி வந்துள்ளனர்.
தமிழ மீனவர்கள் மீதான தேவையற்ற, இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதல் காரணமாக மீனவ சமுதாயத்தினரிடையே விரக்தியும், கோபமும் அதிகரித்துள்ளது. இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் தாக்குதல் மற்றும் சூறையாடும் நடவடிக்கைகளை நமது கடற்படையும், கடலோர காவல்படையும் தடுக்கவில்லை. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
எனவே, இலங்கை கடற்படையின் இந்த செயல்களை தாங்கள் வன்மையாக கண்டித்து, தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் அவர்களின் உயிர்கள், தொழில்கள் மற்றும் மீன்பிடி உரிமை பாதுகாப்புக்கு இந்தியா உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment