Tuesday, October 15, 2013

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க: நேற்று யாழ் விஜயம்!

Tuesday,15, October, 2013
இலங்கை::இராணுவ தளபதி தயா ரத்னாயக்க முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது தென்மராட்சி பகுதிக்கு சென்று அங்குள்ள படை முகாம்களின் நிலைமைகள் பற்றி ஆராய்ந்துள்ளார். தொடர்ந்து யாழ். நகரிற்கு வெளியே பண்ணை பகுதியில் அமைந்துள்ள படை முகாமில் இராணுவ வீரர்களுடன் சந்திப்பொன்றினையும் மேற்கொண்டார்.

ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் அவசியமானது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த படையினர் கடுமையான ஒழுக்க விதிகளைப் பேணுவது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் முதல் தடவையாக தயா ரட்நாயக்க யாழ்ப்பாண கட்டளைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிபயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் படையினரின் நடவடிக்கைகளில் மாற்றம் அவசியம் என தெரிவித்துள்ளார்.

பயிற்சிகள் மிக முக்கியமானது எனவும், பயிற்சிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு எவ்வாறு சேவையாற்றுவது என்பது தொடர்பில் படையினருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment