Thursday, October 24, 2013
இலங்கை::சென்னை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊடகம் ஒன்றின் தகவலின் படி, தற்போது தமிழ் நாட்டில் உள்ள அவர், ஜெயலலிதாவை சந்திப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக, சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக தெரிகிறது.
அவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு இந்த வாரம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் அவர் நேற்று முன்தினம் பாரதீயே ஜனதா கட்சியின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது..

இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக இந்தியத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாட வேண்டியுள்ளதாக தமிழ் தேசியக் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாரதீய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே .சம்பந்தன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக இந்தியாவின் தலையீடு அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஒவ் இந்தியா' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
'இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் குறித்து இந்தியாவின் அனைத்து மாநில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை முடியுமானவரை சந்தித்து விளக்கமளிக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் நாட்டின் நலன்களுக்கு உகந்தவை அல்ல சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment