Sunday, October 20, 2013

தொலைபேசி, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம் நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

Sunday, October 20, 2013
இலங்கை::தொலைபேசி, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம் நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

சீட்டிலுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாகவும், அல்லது வேறு போட்டிகளில் வெற்றி கிடைத்திருப்பதாக தெரிவித்து, தொலைபேசி வாயிலாகவோ, அல்லது குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பணமோசடியில் ஈடுபடும் குழுக்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.

கடந்த சில வாரங்களுக்குள் இவ்வாறான சம்பவங்கள் பல பதிவாகி இருப்பதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக ஏமாற்றுதல், மோசடி செய்தல் மற்றும் பழவந்தமாக நிதி சேகரித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment