Sunday, October 6, 2013

புலி­கள்தான் இன்று கூட்­ட­மைப்­பி­ன­ரா­கவும் சர்­வ­தேச சக்­தி­யி­ன­ரா­கவும் செயற்படுகின்றனர்: குண­தாச அம­ர­சே­கர!

Sunday, October 06, 2013
இலங்கை::புலிகளை அழித்தவுடன் நாட்டின் பிரிவினைவாதப் பிரச்சினைகள் முடிவடைந்து விட்டதென நினைப்பது எமது முட்டாள்தனமேயாகும் . பிரபாகரன் ஏற்படுத்திய போர் சூழலின் இரண்டாம் கட்டத்தை நோக்கியே நாம் பயணிக்கின்றோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார் .
 
விக்கினேஸ்வரனுக்குப் பயந்து அரசாங்கம் பின்வாங்கினால் இறுதியில் இலங்கை இரண்டு நாடாக மாறும் . அதை ஜனாதிபதி கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார் . செளசிரிபாயவில் நேற்று முன்தினம் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார் .
 
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் ,  புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் . இனிமேல் நாட்டில் பிரிவினைவாத தீவிரவாதிகள் இல்லை என அரசாங்கம் நினைத்துச் செயற்படுகின்றது . ஆனால் , புலி இயக்கத்தவர்கள்தான் இன்று சர்வதேச சக்திகளாகவும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுகின்றனர் . இவர்கள் எமக்கு அழுத்தம் கொடுப்பதன் காரணத்தினாலேயே இன்று நாம் நெருக்கடியானதொரு சூழலினை எதிர்கொண்டு வருகின்றோம் .
 
30 வருட கால யுத்த சூழலைவிட மோசமானதொரு சூழலை நோக்கியே இன்று நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம் .
வடக்கு தமிழர்களை ஏமாற்றி அவர்களை அடிப்படையாக வைத்து பிரிவினை தனி நாட்டுக் கோரிக்கைக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது . இதன் முதற் கட்டமாகவே வடமாகாணத்தில் கூட்டமைப்பின் வெற்றி அமைந்துள்ளது .
மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் முன்னர் கூட்டமைப்பின் கோரிக்கையும் , சர்வதேசத்தின் அழுத்தமும் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . எனவே இதனை தடுக்க வேண்டுமாயின் இலங்கையர்கள் , நாட்டை நேசிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் .
 
விக்கினேஸ்வரன் எதிர்பார்ப்பதைப்போன்றே அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது . அவரின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் அதன் பின்னர் அரசாங்கத்தினால் எம் நாட்டை காப்பாற்ற முடியாது போய் விடும் . இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது . ஜனாதிபதி மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையினை அவர் காப்பாற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .
பெல்கமுவே நாலகதேரர்:-
 
அது தொடர்பாக பெல்கமுவே நாலக தேரர் தெரிவிக்கையில் , எமது நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆட்சியினை கைப்பற்றும் நோக்கோடு செயற்படுகின்றனவே தவிர நாட்டைக்காப்பற்றும் எண்ணம் எவருக்கும் இல்லை . சர்வதேசம் எமக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் போது நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும் .
 
மேலும் சூடான் , லிபியாவைப்போன்று எமது நாட்டையும் மாற்றி அமைதியினை நிலைகுலைய வைக்கவே தீவிரவாத சக்திகள் செயற்படுகின்றன . அமெரிக்காவிற்கு எதிராக கியூபா , வியட்நாம் ஆகிய நாடுகள் போராடி தமது தனித்துவத்தினை பேணுவதை போன்று நாமும் போராடி வெல்ல வேண்டும் .
 
சர்வதேசத்திற்கும் இங்குள்ள பிரிவினைவாதிகளுக்கும் நாம் யார் என்பதை நிரூபித்துக்காட்டவேண்டும் .
நாட்டில் இன்று சிங்களவர்களுக்கு உரிமைகள் இல்லாது போகின்றது . எமது சமூகத்தினர் நாட்டின் எப்பகுதியிலும் வாழக்கூடிய சூழல் இல்லை .
 
இம்முறை ஐந்தாம் தரப்புலமை ப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இதற்கு நல்லதொரு உதாரணமாகும் . தமிழ் மாணவர்கள் இலங்கையில் அனைத்துப்பகுதிகளிலும் கல்வி கற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் . ஆனால் வடக்கில் சிங்கள மாணவர்கள் ஒருவரேனும் சிறந்த பெறுபேறுகளைப்பெறவில்லை . அங்குள்ள சிங்கள மாணவர்கள் தமது தாய் மொழியில் கல்வி கற்பது பெரும் சிரமமான காரியமாகவே மாறியுள்ளது என்றார் .

No comments:

Post a Comment