Monday, October 14, 2013

வட மாகாணசபை பதவிப் பிரமாண நிகழ்வுகளை புறக்கணித்த உறுப்பினர்களிடம் விளக்கம் கோருவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் திட்டம்!

Monday, October,14, 2013
இலங்கை::வட மாகாணசபை பதவிப் பிரமாண நிகழ்வுகளை புறக்கணித்த உறுப்பினர்களிடம் விளக்கம் கோருவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் திட்டமிட்டுள்ளதாக  ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்வுகளில் ஒன்பது உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஏற்
பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து சில உறுப்பினர்கள் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. பதவிப் பிரமாண நிகழ்வுகளை புறக்கணித்தமை குறித்து உறுப்பினர்களிடம் தனித் தனியாக விளக்கம் கோரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மிகவும் சரியான முறையில் அமைச்சுப் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுளளதாகவும் எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment