Sunday, October 27, 2013

டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்கும் விவகாரத்தை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் வெள்ளை மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன்:உலக நாடுகளின் தலைவர்களுடைய டெலிபோன் பேச்சுகளை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்எஸ்ஏ) உளவு நிறுவனம் ஒட்டு கேட்கும் விவகாரத்தை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் வெள்ளை மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏ உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களில் ஊடுருவி அந்நாட்டு தலைவர்கள், குடிமக்களின் தகவல்களை திருடியதாக முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடென்  அம்பலப்படுத்தினார்.
 
இதனால் அவரை அமெரிக்கா கைது செய்ய முயன்றது. ஆனால், ஸ்நோடென் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டு கேட்பதாக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் பத்திரிகைகள் ஸ்னோடென் அம்பலப்படுத்திய தகவல்களை மேற்கோள் காட்டி பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லின் டெலிபோன் ஒட்டு கேட்பு தொடர்பாக ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஜெர்மனியின் உளவு துறை உயர்  அதிகாரிகள், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்த வாஷிங்டன் விரைந்துள்ளனர். இந்த விவகாரம் அமெரிக்கர்களின் பெயரை கெடுப்பதாக உள்ளது என்று கூறி அரசுக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கையை கண்டித்து நேற்று வெள்ளை மாளிகை முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘மக்களை உளவு பார்க்காதே, பெரிய அண்ணன் நடவடிக்கையை கைவிடு, ஸ்நோடேன்னுக்கு நன்றி’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஒபாமா நிர்வாகத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளை மாளிகை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவில் 4 பேரை சுட்டுக் கொன்ற ஆசாமி தற்கொலை!
 
நியூயார்க்:அமெரிக்காவில் பக்கத்து வீட்டை சேர்ந்த 4 பேரை சுட்டுக் கொன்று விட்டு ஆசாமி தற்கொலை செய்து கொண்டார்.நியூயார்க் அருகே பீனிக்ஸ் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை சுமார் 9.15 மணி அளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் பயத்தில் அலறி கூச்சல் போட்டனர். உடனடியாக அங்கிருக்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். இதுகுறித்து பீனிக்ஸ் காவல் நிலைய அதிகாரி தாம்சன் கூறியதாவது:
 
சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது கட்டிடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள் காணப்பட்டன. ஆனால் வெளியில் யாரும் காயத்துடன் இல்லை. பின்னர் நிபுணர்களை வரவழைத்து கட்டிடத்தின் மாற்று வழியில் உள்ளே சென்று பார்த்த போது, ஒரு வீட்டின் முன்பு 2 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது தெரிந்தது. அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வெவ்வேறு அறைகளில் 2 பேர் தனித்தனியே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அங்கிருந்த 2 நாய்களையும் ஆசாமி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனையடுத்து சிறப்பு ஆயுதப்படை போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் வந்து சோதனை நடத்தினர். அப்போது கட்டிடத்தின் சற்று தொலைவில் இருந்த பக்கத்து வீட்டில் சுமார் 50 வயது நிரம்பிய ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவர்தான் தனது பக்கத்து அபார்ட்மென்டில் குடியிருக்கும் 4 பேரை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு தாம்சன் கூறினார். அபார்ட்மென்டில் வசித்த 4 பேரை அவர் எதற்காக சுட்டுக் கொன்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment