Saturday, October 19, 2013
இலங்கை::வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் அதிகாரம் சர்வதேசத்திற்கு இல்லை. எமது நாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் இராணுவம் பொறுப்புக் கூற முடியாது. எமது கடமை மக்களை பாதுகாப்பதே தவிர சீரழிப்பதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருக்கும் இராணுவத்தினரை வெளியேற்றுவதில் சில அமைப்புகளும் வடக்கின் கட்சிகளும் சர்வதேச அமைப்புகளும் மும்முரமாக செயற்படுகின்றன. இலங்கையில் இன்று அமைதியானதொரு சூழலினை ஏற்படுத்தியதில் இலங்கை இராணுவத்தினரே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவை இலங்கையர்களுக்கு மட்டுமே தெரியும்.
வடக்கில் இராணுவக் குற்றங்கள் நடந்ததாகக் கூறியே இன்று எமது நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.
ஆனால், வடக்கில் பொதுமக்களின் இழப்புகளை விடவும் அதிகமாக எமது இராணுவ வீரர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவை தொடர்பில் எந்த அமைப்புகளோ அல்லது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவோ பேசத் தயாராக இல்லை. மேலும், வடக்கிலும் கிழக்கிலும் கடந்த 4 ஆண்டுகளில் 374 குற்றச்சாட்டுகள், பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் பதியப்பட்டுள்ளன.
இவற்றில் 11 குற்றச்சாட்டுகள் மட்டும் இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த 11 முறைப்பாடுகளும் சிங்களப் பெண்களினாலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் பெண்கள் இராணுவத்தினரால் பாதிக்கப்படுகின்றனர் என முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளமுடியாது.
வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்களுடன் இராணுவத்தினரும் தொடர்புபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதில் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளதாக அந்த செய்திகளில் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இக் குற்றச்சாட்டுக்களை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை மூலமாக இராணுவப் பேச்சாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
எனினும் வடக்கு, கிழக்கில் பெண்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment