Sunday, October 27, 2013

ஷிரானி திலகவர்தன பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம்!

Sunday, October 27, 2013
இலங்கை::உயர் நீதிமன்ற நீதியரசர்  ஷிரானி திலகவர்தன பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
 
ஜனாதிபதி அலுவலகத்தில் ஷிரானி திலகவர்தன இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
 
இதேவேளை, நீர்பாசனம் மற்றும் விவசாய சிந்தனைகள் எனப்படும் "நில் தியவர கெத் யாயட"என்ற நூலின் பிரதி  நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
 
நீர்பாசனம் மற்றும் விவசாய அமைச்சராக தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பதிவிவகித்த காலக்கட்டத்தில் அவர் ஆற்றிய சேவைகள் பாராட்டும்வகையிலேயே இந்த நூலினை நிமல் வீரதுங்க எழுதியுள்ளார்.
 
இதன்போது தேசிய நீர்பாசன துறையை பாதுகாக்கும் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment