Monday, October 28, 2013
ஊட்டி::ஊட்டிக்கு ஹனிமூன் வந்த இலங்கை வாலிபர், மனைவி கண்முன்பு அருவியில் தவறி விழுந்து பலியானார். திருமணமான சில நாட்களிலேயே இந்த பரிதாபம் நடந்துள்ளது.இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் ஜெனட் ரீகன் (29). இவருக்கு கடந்த 23ம் தேதி திருமணம் நடந்தது. மனைவி ஜனனி மற்றும் குடும்பத்தினர் 6 பேருடன் சென்னை வந்தார். அங்கிருந்து வாடகை வாகனம் மூலம் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு ஊட்டிக்கு வந்தனர். முதுமலைக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றனர். வாகனத்தில் இன்ஜின் சூடாகியதால், கல்லட்டியில் வாகனத்தை நிறுத்தினர். அப்போது கார் டிரைவர் கார்த்திக், ‘அருகில் அருவி உள்ளது. பார்த்து வாருங்கள்‘ என்று கூறியுள்ளார்.
ஜெனட்ரீகனும், குடும்பத்தினரும் அருவியை பார்க்க சென்றனர். அது செங்குத்தான பாறைகள் நிறைந்த ஆபத்தான பகுதியாகும். ஆர்வம் மிகுதியால் ஜெனட் ரீகன் ஒரு பாறையில் நின்று அருவி அருகே சென்று பார்த்தார். அவரது மனைவி சற்று தள்ளி நின்று கணவனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெனட்ரீகன் கால் வழுக்கி அதலபாதாளத்தில் விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கூச்சல் போட்டார். அருவி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ஜெனட் ரீகன் பரிதாபமாக இறந்தார்.ஹனிமூன் வந்த இடத்தில், தன் கண் முன்னாலேயே கணவன் அருவியில் விழுந்து பலியானதை கண்ட ஜெனட் ரீகனின் மனைவியும், குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் நீரில் சிக்கி இறந்த ஜெனட் ரீகனின் உடலை மீட்டனர். அவரது சடலத்தை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலெக்டர் சங்கர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். புதுமந்து போலீசார் வ

No comments:
Post a Comment