Tuesday, October 29, 2013

புலிகளுக்கு ஆதரவு வழங்கிய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்துள்ளது!

Tuesday, October 29, 2013
US::புலிகளுக்கு ஆதரவு வழங்கிய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்துள்ளது.

33 வயதான சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற தமிழருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாட்டர்லூ பல்கலைக்கழகத்தி;ன் பொறியியல் பீடத்தில் கல்வி பயின்று வந்த குறித்த நபர் 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சுரேஸ் ஒப்புக் கொண்டிருந்தார்.

நீர்மூழ்கிக்கப்பல் மென்பொருள் மற்றும் ஆயுதங்களை புலிகளுக்காக சுரேஸ் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சுரேஸ் ஏற்கனவே கனடாவில் இரண்டு மாதங்களும் அமெரிக்காவில் பத்து மாதங்களும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரது தண்டனைக் காலம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சுரேஸிற்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

No comments:

Post a Comment