Tuesday, October 8, 2013

சம்பூர் அனல் மின்நிலையத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!

Tuesday, October 08, 2013
இலங்கை::சம்பூர் அனல் மின்நிலையத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை (07ம் திகதி)  ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

500 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இந்த அனல் மின்நிலையத்தை அமைப்பதற்கு இலங்கைச் சார்பாக இலங்கை மின்சாரச்சபையும் இந்தியா சார்பாக இந்திய தேசிய அனல்மின் கூட்டுத்தாபனமும் கைச்சாத்திட்டது.

2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

நாட்டின் மின்சாரத்தின் பயன்பாட்டை  அதிகரிக்கும் நோக்குடன்  நிறுவவுள்ள இந்த அனல் மின்நிலையம் 512 அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது.

2018ம் ஆண்டின் அதன் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் இலங்கை அரசு இணைந்து இந்த அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான தீர்மானம் 2011ம் ஆண்டில் எட்டப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முழுமையான ஆலோசனைக்கமைய,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிநடத்தலில், மின்சக்தி வலுவூட்டல் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் மேற்பார்வையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment