Tuesday, October 22, 2013

அமெரிக்க கப்பல் சிறை பிடிக்கப்பட்டது முறையற்றதாம்: அமெரிக்காவின் அட்வன் போர்டு!!

Tuesday, October 22, 2013
வாஷிங்டன்::அமெரிக்க கப்பலை இந்திய கடலோர காவல் படை சிறை பிடித்தது முறையற்ற செயல் என்று அட்வன்போர்டு கப்பல் நிறுவனத் தலைவர் வில்லியம்ஹெச் வாட்சன் கூறினார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
 
கப்பலை இந்திய கடலோர காவல் படை சிறை பிடித்தது முறையற்ற செயல். இந்த பிரச்சனை தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று வருகிறோம். ராஜீய மற்றும் சட்ட ரீதியாக அணுகி , கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அனுமதி இன்றி நுழைந்ததாக அமெரிக்காவின் அட்வன் போர்டு நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த 12_ம்தேதி கடலோர காவல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கப்பலின் கேப்டன், மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 33 பேரும் கைது செய்யப்பட்டனர். 

No comments:

Post a Comment