இலங்கை::மதர் சிறிலங்கா” நிறுவன நிறுவுனரும் தலைவருமான ஜானகி குறுப்பு தலைமையில் “மதர்
சிறிலங்கா” நிறுவன பிரதிநிதிகள் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களினை 18
ஒக்ரோபர் 2013 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து
கலந்துரையாடினார்கள்.
மதர் சிறிலங்கா” செயற்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்தினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டது. இதன் ஊடாக ”ரன்” நிகழ்ச்சித்திட்டம் மூலம் இன ஐக்கியம், தேசிய
உணர்வு, குடியுரிமைக்குரிய பொறுப்புகள் போன்ற விடயங்கள் இலங்கையின் இளம்
சந்ததியினரிடையே வெளிப்படுத்தப்படுகின்றது. இத்திட்டம் இலங்கையின் 25
மாவட்டங்களிலும் உள்ள 1300 பாடசாலைகளில் முன்னெடுக்ப்படுகின்றது.
இத்திட்டம் வட மாகாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக இந்நிறுவன
பிரதிநிதிகள் தமது திட்டங்கள் தொடர்பாக ஆளுநருக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள்.
மேலும் இத்திட்டம் வெற்றி பெற வடமாகாணத்தின் ஆதரவை வேண்டி நின்றார்கள்.


No comments:
Post a Comment