Monday, October 7, 2013

கடந்த காலங்களில் இளைஞர்களுக்கு மரணத்தை கொடுத்தவர்கள் வடக்கின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்: பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Monday, October, 07 ,2013
இலங்கை::கடந்த காலங்களில் இளைஞர்களுக்கு மரணத்தை கொடுத்தவர்கள் வடக்கின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வடக்கின் வசந்தம் திட்டத்தை அமுல்படுத்தியது அரசியல் நோக்கத்திற்காக அல்ல. மக்களுக்கு நன்மைகளை வழங்குவதற்காகவே. வடக்கு மக்களின் தீர்மானத்தை மதிக்கின்றோம். வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கிட்டியமை அரசாங்கம் அடைந்த வெற்றியாகும்.

அன்று இளைஞர் யுவதிகளுக்கு மரணத்தையும் குண்டுகளையும் வழங்கியவர்கள் இன்று வடக்கில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கில் நிலவி வந்த பதற்ற சூழ்நிலையை தீர்த்து மக்களுக்கு ஜனாதிபதியே சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் இராணுவத்தினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையாக சாடியிருந்தனர். வடக்கு மக்கள் நீண்ட காலமாக பயங்கரவாதத்தின் பிடியில்

சிக்கியிருந்தார்கள் என்பதனை தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடுமென பசில் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்லேவல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment