Thursday, October 10, 2013
சென்னை::முதல்வர் ஜெயலலிதா ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தலைமறைவு எதிரிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையின் போது கொடூரமான ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் எஸ்.லட்சுமணனை நேற்று (9.10.2013) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதுரை திருமங்கலத்தில் கடந்த 2011_ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்த வழக்கிலும் மற்றும் பல்வேறு கொலை வழக்குகளிலும் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், திருநெல்வேலியைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோரை காவல் துறையினர் தேடிவந்தனர்.
மேற்படி தலைமறைவு எதிரிகளில் ஒருவரான 'போலீஸ்' பக்ருதீன் 4.10.2013 அன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தத் தருணத்தில் கிடைத்த மற்றொரு தகவலின் அடிப்படையில், ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இதர தலைமறைவு எதிரிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்ய தனிப்படையினர் புத்தூர் விரைந்து 5.10.2013 அன்று மேற்படி தலைமறைவு எதிரிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். காவல் துறையினரின் தீவிர முயற்சியின் பலனாக எதிரிகள் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் எஸ்.லட்சுமணன் எதிரிகளால் கொடூரமான ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் எஸ்.லட்சுமணனின் துணிச்சலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பாக ரொக்கப் பரிசாக 15 லட்சம் ரூபாயும், அவருடைய மருத்துவச் செலவு அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்வதோடு, ஒரு படி பதவி உயர்வும் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 8.10.2013 அன்று அறிவித்தார்.
ஆந்திர மாநிலம், புத்தூரில் தலைமறைவான எதிரிகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு படுகாயம் அடைந்து, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் எஸ்.லட்சுமணனை நேற்று முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.
அப்போது "நீங்கள் உயிர் பிழைத்தது கடவுள் செயல். ஏனென்றால் உயிரோடு இருந்து இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் உங்களுக்கு நிறைய இருக்கின்றன. டாக்டரிடம் விசாரித்தேன், மெடிக்கல் ரிப்போர்ட் முழுவதையும் பார்த்தேன், இனிமேல் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சீக்கிரம் குணமாகிவிடுவீர்கள். இங்கே நன்றாக பார்த்துக் கொள்வார்கள். உங்களுடைய மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். என்ன தேவைப்பட்டாலும் நாங்கள் செய்வோம். மற்றபடி உங்களுடைய வீரத்தைப் பாராட்டி மக்களுடைய நன்றியை தெரிவிக்கும் வகையில் 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளோம். அத்துடன் உங்களுடைய மருத்துவச் செலவு முழுவதும் ஏற்றுக் கொள்கிறோம். அதோடு ஒருபடி அஷஷடீங்டீஙுஹசிடீக்ஷ அறிவித்துள்ளோம்.
அதனால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. மருத்துவர்கள் இங்கே நன்றாக பார்த்துக் கொள்வார்கள். உங்கள் குழந்தைகளைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அவர்களுடைய எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம். நீங்கள் உயிர் பிழைத்தது நான் சொன்னது போல கடவுள் செயல். மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்க்கும் போது எப்படி உயிர் பிழைத்தீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் உங்களை கடவுள் காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்லும் போது, நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய உள்ளது. ரடீ ஹஙுடீ ஹங்ங் ஙீஙுச்சீக்ஷ ச்க் நீச்சீ ஙஙு. கஹகூஙூகீஙிஹடூஹடூ. நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பெருமைப் படுகிறோம். காவல் துறையில் ஒரு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக, எடுத்துக் காட்டாக திகழ்கிறீர்கள். உங்களைப் பார்த்து நாங்கள் மிகவும் பெருமைப் படுகிறோம். உங்களைப் பார்ப்பதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகிய எல்லோரும் இங்கு வந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதா எஸ்.லட்சுமணனின் வீரதீரச் செயலைப் பாராட்டி, தமிழக மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில், 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்து அதற்கான காசோலையினை அவரது மனைவி மதுபென்னிடம் வழங்கினார். மருத்துவமனையில் லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு இயல்பு நிலைக்கு விரைந்து திரும்பிடத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது ஆய்வாளர் லட்சுமணனின் குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
_0.jpg)
No comments:
Post a Comment