Thursday, October 24, 2013

இலங்கை இதுவரை 38 நாடுகளுடன் ஒப்பந்தங்கள்: வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ்!

Thursday, October 24, 2013
இலங்கை::இலங்கை இதுவரை 38 நாடுகளுடன் உள்நாட்டு அரசிறைச் சட்டத்தின் கீழ் ஒப்பந்தங் கள் மேற்கொண்டுள்ளதோடு இதனூடாக இலங்கையில் நேரடி முதலீடுகள் அதிகரிப் பதோடு பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாரிய உந்து சக்தியாக அமையுமென வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித் தார்.
 
ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க மற்றும் அரபு நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய அவர், காலத்திற்கு ஏற்றவாறு எமது வெளிநாட்டுக் கொள் கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
 
சீசெல்ஸ், பலஸ்தீன், பெலாரஸ், லக்ஸம்பெர்க் ஆகிய நாடுகளுடனான உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழான ஒப்பந்தங்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பான விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,இலங்கை 4 நாடுகளுடன் உடன்பாடு மேற்கொண்டுள்ளது.
 
பலஸ்தீனம், சீசெல்ஸ், பெலரூஸ், லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளுடனே இவ்வாறு வருமான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்காகவும் வரி செலுத்தாது தட்டிக்கழிப்பதனை தவிர்ப்பதற்காகவும் உள்நாட்டு அரசிறைச் சட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறவே இது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் பிரகாரம் ஏனைய நாடுகளுடன் வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை என்பவற்றை மேம்படுத்த விசேட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் இவை முக்கிய இலக்குகளாக உள்ளன. எமது பொருளாதார நலன்களை மேம்படுத்தும் முக்கிய அங்கமாக எமது வெளிநாட்டுக் கொள்கை காணப்படுகிறது.
 
கடந்த காலங்களில் தவற விடப்பட்ட வெளிநாடுகள் குறித்து நாம் விசேட கவனம் செலுத்தி அவற்றுடனான இராஜதந்திர உறவுகளை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுடனான உறவை பலப்படுத்தி அதனை நாட்டு மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்த உள்ளோம்.வெளிநாடுகளுடன் நாம் செய்து கொள்ளும் இவ்வாறான உடன்பாடுகள் மூலம் நேரடி முதலீடுகள் அதிகரிக்கும். உற்பத்தி அதிகரிப்பதோடு தொழில்வாய்ப்புகள் கூடும். இதற்கு உகந்த பின்னணியை ஏற்படுத்த உடன்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 
இது வரை 38 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெலாரஸ¤க்கு விஜயம் செய்தார். அந்த நாட்டுடனான ஒப்பந்தத்தின் மூலமாக எமது நாட்டு படகுகள் மற்றும் கப்பல்களுக்கு பாரிய கேள்வி ஏற்படும். பல இலட்சம் ரூபா பெறுமதியான படகுகளை பெலாரஸ் கொள்வனவு செய்ய உள்ளது.
 
தனியார் துறைக்கும் அங்கு வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. எரிசக்தி துறையுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் சீசெல்ஸில் பணியாற்றுகின்றன. சீசெல்சுக்கும் இலங்கைக்குமிடையில் விரைவில் நேரடி விமானச் சேவைகள் ஆரம்பிக்க இந்த உடன்பாட்டினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுடனான தொடர்புகள் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment