Friday, October 18, 2013
தூத்துக்குடி::இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த ‘‘சீ மேன் கார்டு ஓகியோ’’ என்ற ரோந்து கப்பலை தூத்துக்குடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 12–ந்தேதி மடக்கி பிடித்தனர்.
அந்த கப்பலில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. அந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் , ஐ.பி., ‘‘கியூ’’ உள்ளிட்ட மத்திய–மாநில உளவுப்பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் கூட்டாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த கப்பல் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘‘அட்வன் போர்ட்’’ என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் என்பது தெரிய வந்தது.
அந்த கப்பலில் 35 அதிநவீன செமி ஆட்டோ மெட்டிக் துப்பாக்கிகள், 5,700 ரவுண்ட் தோட்டாக்கள் இருந்தன. பயிற்சி பெற்ற 25 பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் இருந்தனர். மாலுமிகளில் 8 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். பாதுகாவலர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன், எஸ்டோனியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.
அந்த அமெரிக்க கப்பலுக்கு தூத்துக்குடியில் இருந்து திருட்டுத்தனமாக டீசல் சப்ளை செய்தது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஆயுதங்கள் வைத்திருத்தல், அளவுக் கதிகமாக துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருத்தல், இந்திய கடல் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் பரிமாற்றம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள், 10 மாலுமிகள் மீது தருவை குளம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், அந்த கப்பலை நேரில் பார்வையிட்டு விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கடலோர காவல் படையிடம் இருந்து ‘கியூ’ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
தமிழக ‘கியூ’பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி கடந்த 16–ந்தேதி தூத்துக்குடி வந்தார். அவரிடம் வழக்கு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. கப்பல் மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
அமெரிக்க கப்பல் விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்ததால் மத்திய உளவுப்பிரிவான ‘‘ரா’’ அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்தனர். ‘‘ரா’’ அமைப்பின் உதவி கமிஷனர் சசிகுமார் தலைமையில் 2 கள அதிகாரிகள் முதலில் ரகசிய விசாரணை நடத்தினர்.
அந்த வழக்கு விவரங்களை கேட்டறிந்த அவர்கள், அமெரிக்க கப்பலின் மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.
நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் ‘‘கியூ’’ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி தனது விசாரணையை முடித்தார். இந்த வழக்கில் அனைவரையும் இன்று கைது செய்யப்போவதாக கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு கப்பலில் இருந்த 35துப்பாக்கிகள், 5,700 தோட்டாக்களை ‘‘கியூ’’ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை தூத்துக்குடி துறை முகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புபடைக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கில் ஒப்படைத்தனர்.
இன்றுகாலை 8 மணியளவில் அமெரிக்க கப்பலின் கேப்டன் டுட்னிக் வாலன்ஸ்டின், மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் உள்பட 34 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று மதியம் அல்லது பிற்பகலில் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தெரிகிறது....
தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க கப்பல் மூலம் நடுக்கடலில் ஆயுதங்கள் பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து மத்திய உளவுப்பிரிவு அமைப்பான ''ரா'' அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் நவீன ரக ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த அட்வென் போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ''சீமேன் கார்டு ஒகியா'' என்ற கப்பலை கடந்த 11ம் தேதி இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று 2வது நாளாக எஸ்.பி. பவானீஸ்வரி விசாரணையை தொடர்ந்தார். இந்நிலையில் கப்பலில் இருப்பவர்கள் விசார ணைக்கு ஒத்துழைக்க மறுப் பதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.இதற்கிடையில் கப்பலில் உள்ளவர்களும் ''அட்வென் போர்ட்'' நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அளிக்கும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் உண்மையை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மர்மம் நீடிப்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய உளவுப்பிரிவு அமைப்பான ‘ரா' முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அந்த அமைப்பை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தலைமையில் இரண்டு கள அதிகாரிகள் என மொத்தம் 3 பேர் தூத்துக்குடி வந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 6 மாதமாகவே சீமென்கார்டு ஒகியா கப்பல் இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகளுக்கும் இடையே லாக்கேடிவ் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அங்கிருந்து கொச்சி துறைமுகத்திற்கு எளிதாக சென்று வந்துள்ளது. 29ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு இந்திய பெருங்கடல் வழியாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுற்றியுள் ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அப்போதே இதன் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ள பாதுகாப்பு துறையினர் அந்த கப்பலில் சோதனையிடுமாறு கடலோர காவல்படைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த கப்பலில் நாயகிதேவி கமாண்டன்ட் நரேந்தர் தலைமையில் சோதனை நடந்துள்ளது. அப்போது கேப்டனுடன் சேர்ந்து 15க்கும் குறைவானவர்களே அதில் இருந்துள்ளனர். ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த கப்பலை கடலோர காவல்படையினர் விடுவித்துள்ளனர்.
ஆனால் தற்போது இக்கப்பல் 35 நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் 35 பேருடன் சிக்கியுள்ளதால் அந்த கப்பலுக்கு ஆயுதங்கள் எவ்வாறு வந்தது? நடுக்கடலில் வேறு கப்பல்கள் மூலம் அமெரிக்க கப்பலுக்கு ஆயுதங்கள் பறிமாற் றம் நடந்ததா? உண்மையிலேயே இது அட்வென் போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலா அல்லது சர்வதேச அளவில் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டுள்ள கப்பலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் கப்பலில் உள்ள ஆயுதங்களை பதிவு செய்ததற்காக அட்வென்போர்ட் நிறுவனம் அளித்துள்ள பதிவு சான்றுகள் உண்மையானவைதானா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள பிறநாட்டு ஊழியர்கள் நடவடிக்கை குறித்து அதிலிருந்த தமிழர் உட்பட 9 இந்தியர்களிடம் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கப்பலில் இருந்த தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கப்பல் நிறுவன பிரதிநிதி கொச்சியை சேர்ந்த சாக்கோ தாமஸ் தவிர வேறு யாரே னும் தொடர்பு கொண்டார்களா? டீசல் அளவு குறைவாக இருப்பதால் செப்டம்பர் மாதத்தில் சீமென் கார்டு கப்பலில் இருந்து அட்வென் போர்ட் தலைமையகத்திற்கு டீசல் தேவை என்று தெரிவித்த தகவல் உண்மையானது தானா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
எக்ஸ்ட்ரா தகவல்
‘ரா, (ரிசர்ச் அண்ட் அனலிஸிஸ் விங்) என்பது மத்திய அரசின் உளவுப் பிரிவாகும். 1965ல் நடந்த இந்தியா , பாகிஸ்தான் போருக்கு பின்னர் உளவுப் பிரிவின் அவசியம் கருதி 1968ம் ஆண்டு செப்.21ம் தேதி இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

No comments:
Post a Comment