Thursday, October 17, 2013
இலங்கை::திருகோணமலை, புல்மோட்டை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களிடமிருந்த மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களிடமிருந்த மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தி மாத்தறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீதான தாக்குதல் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தி மாத்தறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீதான தாக்குதல் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவரான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நதில் நிஷாந்த மாலகொட சட்டத்தரணியூடாக இன்று சரணடைந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment