Monday, October,14, 2013
ராமேஸ்வரம்::புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேரின் சிறைக் காவல் அக்டோபர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரின் சிறைக் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேப்போல, இலங்கை கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மொத்தம் 23 தமிழக மீனவர்களின் காவல் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment