Monday, October,14, 2013
இலங்கை::இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பிலான மேன்முறையீடுகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்வதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
குறித்த காலப் பகுதியில் வாக்காளர் இடாப்பில் தமது பெயரை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கவும், இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் எதிர்ப்புக்களை தாக்கல் செய்யவும் முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு தற்போது மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஆகியவற்றில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணிகளை பூர்த்தி செய்ய தேர்தல்கள் செயலகம் உத்தேசித்துள்ளது.
இறுதி வாக்காளர் இடாப்பு டிசம்பர் 31 ஆம் திகதி அளவில் அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் செயகலம் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment