Saturday, October 19, 2013
ஜம்மு::ஜம்மு காஷ்மீர் எல்லையில் 25 இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவ படைகள் நேற்றிரவு முதல் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது. நமது ராணுவத்தினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஒரு ஊடுருவல்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அப்படி தாக்குதல் நடத்தும் போது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ரகசியமாக ஊடுருவ முயற்சிப்பார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு பிராந்தியத்தில் அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியம் காரணமாக ஏராளமான வீரர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஜம்முவில் நஜ்வால் பகுதியில் ராக்கெட் வெடிகுண்டுகளை இந்திய நிலைகள் மீது வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு வெடிகுண்டு வீட்டின் அருகே விழுந்து வெடித்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 கிராமவாசிகள் படுகாயமடைந்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக, அப்பாவி மக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
நள்ளிரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதே போல், நேற்றிரவு சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டி வந்து நேற்று பல முறை தாக்குதல் நடத்தினர். ஜம்முவில் சம்பா பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 இந்திய ராணுவ நிலைகள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். நமது ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இருதரப்பினரும் ராக்கெட் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் விடிய விடிய சண்டை நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர். ஒரு ஊடுருவல்காரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் இது போல் எல்லை தாண்டி வந்து அத்துமீறி 150 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. எனவே இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தானை அழைத்து மத்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஏற்கனவே சர்வதேச எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 40 பயிற்சி முகாம்களை அமைத்துள்ளனர். அங்கு 700 தீவிரவாதிகளை ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் ஒத்துழைத்துள்ளதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுக்கு உளவுப்பிரிவினர் தகவல் அளித்துள்ளனர். இது இந்திய ராணுவ தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் எல்லையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது இந்த தாக்குதல் சம்பவம் எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment