Wednesday, October, 16, 2013
கோவை::ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக, இலங்கை அகதிகளிடம், 20 லட்ச ரூபாய் மோசடி
செய்த, நான்கு பேர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி, பவானி,
வாழவந்தான் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள,
இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் இருக்கும் சிலரிடம், கள்ளத்தனமாக படகு மூலம்,
ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி, 60,000 ரூபாய் முதல், 1.5 லட்ச ரூபாய் வரை,
தலா, 15 பேரிடம், 20 லட்ச ரூபாய் வசூலித்துள்ளனர். ஆனால், பணம் பெற்றவர்கள்,
ஆஸ்திரேலியா அழைத்து செல்லாமல் ஏமாற்றினர். இதற்கான, பணப் பரிமாற்றம், கோவையில்
உள்ள ஒரு லாட்ஜில் நடந்ததால், பணம் கொடுத்து ஏமாந்தோர்,கோவை,"கியூ' பிராஞ்ச்
போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீசார் நடத்திய
விசாரணையில், சிவசங்கர், ஜெகன், சதீஷ்குமார், மதுரையை சேர்ந்த, வீரமணி உட்பட,
நான்கு பேரை, கடந்த மாதம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நான்கு பேரையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில், காவலில் வைக்க கோவை
மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையிலிருக்கும்
நான்கு பேரிடமும், கமிஷனரின் உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment