Wednesday, October 23, 2013

சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் பட்சத்தில் 1929 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்-48மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்: அசோக் பெர்னான்டோ!

Wednesday, October 23, 2013
இலங்கை::சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் பட்சத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்.48மணி நேரத்திற்குள் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் என்.அசோக் பெர்னான்டோ தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு ஆரையம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

சிறுவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிக கரிசணை செலுத்துகின்றது.
சி
றுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் பட்சத்தில் 1929 எனும் இலக்கத்திற்கு தெரியப்படுத்தினால் பொலிஸார் ஊடாக அதற்கெதிராக 48மணி நேர்த்திற்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு 48மணி நேர்த்திற்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லையானால் 14நாட்களுக்குள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.
கடந்த 2010,2011,2012ம் ஆண்டுகளை விட 2013ம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகங்கள் தெரியப்படுத்தப்படுகின்ற வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஆகவே சிறுவர்களுக்கு நடக்கும் அநீதிகள்,பேராபத்துக்கள் குறித்த 1929 எனும் இலக்கத்தினூடாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி கலமநாதன், ஆரையம்பதி பொதுச்சகாதார வைத்திய அதிகாரி திருமதி யாமினி அச்சுதன்,ஆரையம்பதி சிறுவர் பாதுகாப்பு உளநல உத்தியோதகத்தர் ஆர்.சரோஜினி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment