Thursday, October 24, 2013

சவுதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த இலங்கையர் ஒருவர், கடந்த 18 ஆம் திகதி கொலை!

Thursday, October 24, 2013
இலங்கை::சவுதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த இலங்கையர் ஒருவர், கடந்த 18 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் சவுதி அரசாங்கத்தினால் கைது
 
செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரன்தெனிய தெரிவித்தார்.
சவுதி அரேபியாவிலுள்ள நிறுவனமொன்றின் கணக்காளராக தொழில்புரிந்து வந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
உயிரிழந்தவர் கற்பிட்டி - நாவக்கடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
 
சட்ட நடவடிக்கைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரன்தெனிய  மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment