Monday, October, 07 ,2013
ஸ்ரீநகர்::ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கெரான் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான துப்பாக்கி சண்டை நேற்று 13 வது நாளாக நீடித்தது.
கெரான் பகுதியில் உள்ள சல்பாட்டி என்ற கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் தேதி சுமார் 30 முதல் 40 தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டனர். இவர்கள
து ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் கடுமையாக போராடி தடுத்து வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இதுவரை 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 12 பேர் வரை கொல்லப்பட்டதாக ராணுவ தரப்பில் கூறப்படுகிறது.
தீவிரவாதிகளை தடுக்கும் ராணுவ நடவடிக்கை நேற்று 13 வது நாளாக நீடித்தது. இரு தரப்பினருக்கும் இடையே விட்டு விட்டு துப்பாக்கி சண்டை கடுமையாக நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ராணுவ தரப்பில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு படையினர் மிகுந்த விழிப்புணர்வோடு அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து விட்டார்கள். எனவே இனி தீவிரவாதிகள் தப்புவதற்கு வழியில்லை. அதே நேரம் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் 5 வீரர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகள் நமது முகாம்களை கைப்பற்றி விட்டதாக செய்திகள் வெளியானது.
ஆனால் இது அபத்தமான செய்தி என்று ராணுவ உயரதிகாரி குர்மித்சிங் தெரிவித்தார். ராணுவம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர் தீவிரவாதிகள் நிச்சயம் கொல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment