Sunday, October 20, 2013
புருசெல்ஸ்::ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள நமூர்நகரில் இருந்து குட்டி சுற்றுலா விமானம் புறப்பட்டு சென்றது. அதில், பாராசூட்டில் இருந்து தரையில் குதிக்கும் 11 வீரர்கள் பயணம் செய்தனர்.
விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்தவற்காக அந்த விமானத்தில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்ட 20 நிமிடத்தில் நடுவானில் திடீரென பழுதடைந்தது. பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியது.
இதனால், விமானம் தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 11 பாராசூட் வீரர்களும் தீயில் கருகி பலியாகினர். நடுவானில் பறந்த போது விமான இறக்கையில் சேதம் ஏற்பட்டது.
அதனால் நிலை தடுமாறி நமூரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மார்சோவெலட் என்ற கிராமத்தில் நொறுங்கி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment