Thursday, September 5, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டினால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை!

Thursday, September 05, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டினால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
எதிர்வரும் 21ம் திகதி வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக் தெரிவித்துள்ளார்.
 
வடக்கை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பிய போதிலும், ஆளும் கட்சி வேறு விதமாகவே கருதுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளின் அடிப்படையிலேயே மாகாணங்களை இணைப்பது குறித்து தீர்மானிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment