Saturday, September 28, 2013

இலங்கையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் மண்டபம் வந்தனர்!

Saturday, September 28, 2013
மண்டபம்::இலங்கையில் விடுவிக்கப்பட்ட 41 மீனவர்கள்,மண்டபம் வந்தனர்.
 
ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து ஜூலை 6 மற்றும் ஆக.,3 ல், 10 படகுகளில் 41 மீனவர்கள், மீன்பிடிக்க சென்றனர். இவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்களை மன்னார் கோர்ட் விடுவித்தது.
 
சர்வதேச கடல்எல்லையில், நேற்று மாலை 4 மணிக்கு, 41 மீனவர்களையும், மண்டபம் இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். மண்டபம் வந்த மீனவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் விசாரித்த பின், இன்று (செப்.,28) மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment