இலங்கை::தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுள் தற்போது மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களிலிருந்து கிடைக்கப்ப பெற்றுள்ள விண்ணப்பபடிவங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வட மாகாணத்திலிருந்து விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேசிய அடையாள அட்டையினை துரித கதியில் தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஆர். எம். எஸ். சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்திலிருந்து நடமாடும் சேவை உட்பட மொத்தம் 33,843 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் இதற்கமைய யாழ் மாவட்டத்திற்கு 31,668 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவுக்கு 2,296 அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கிடைக்கப் பெற்ற 5,148 விண்ணப்பபடிவங்களுக்கு அமைய 4,885 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர். எம். எஸ். சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கு 5,260 அடையாள அட்டைகள் விறியோகிக்கப்பட்டுள்ளன.
மிகுதியாகவுள்ள விண்ணப்பங்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் விண்ணப்பங்களிலுள்ள இலக்கங்கள் மற்றும் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றில் காணப்படும் தெளிவின்மையே அடையாள அட்டை விநியோகத்தில் கால தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணமெனவும்
ஆர். எம். எஸ். சரத் குமார மேலும் தெரிவித்துள்ளார்.
ஆர். எம். எஸ். சரத் குமார மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment