Friday, September 13, 2013
இலங்கை::30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் பூரண அமைதி நிலவும் இன்றைய காலகட்டத்தில் அரசா ங்கம் தமிழ் மக்களுக்கு சுய ஆட்சி சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை வடமாகாணத்து மக்கள் நல்ல படி பயன்படுத்தி தாங்கள் வாழும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்ளும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று ஜனாதிபதி செய லகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந் தித்தபோது தெரிவித்தார்.
இலங்கை::30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் பூரண அமைதி நிலவும் இன்றைய காலகட்டத்தில் அரசா ங்கம் தமிழ் மக்களுக்கு சுய ஆட்சி சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை வடமாகாணத்து மக்கள் நல்ல படி பயன்படுத்தி தாங்கள் வாழும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்ளும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று ஜனாதிபதி செய லகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந் தித்தபோது தெரிவித்தார்.
அரசாங்கம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதையே தனக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாக கருதுகிறது. இந்தத் தேர்தலில் என்ன முடிவை மக்கள் எடுப்பார்கள் என்பதும் எனக்குத் தெரி யும். ஆனால், அதை நான் உங்களுக்கு இப்போது சொல்லமாட் டேன். நான் அதனை இப்போது தெரிவித்தால் நீங்கள் அதைப் பற்றி எழுதி எனக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவீர்கள் என்று சிரி த்துக் கொண்டே தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எனக்கு ஒரு விடயத்தை சரியாக கூற முடியும். கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட இந்த வடமாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணிக்கு கூடுதலான வாக்குகள் கிடைக்குமென் பதை தம்மால் உறுதியாக கூற முடியுமென்று சொன்னார்.
ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது. அது உண்மை. ஆனால், எமது போராட்டம் ஆயுதப்போராட்டம் போன்று முடிவடைய முடி யாது. எமது போராட்டம் ஒரு நீதியான போராட்டம். நீங்களும் உங்கள் பேரப்பிள்ளைகளும் இந்த மண்ணில் வாழ வேண்டுமென் றால் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்க செயற்பாடுகளில் ஈடுபடும் போது நீங்கள் அவ ர்களுக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன் என்று சம்பந்தன் தெரிவித்தது பற்றி கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, தேர்தல் பிரசாரங்களில் எவரும் எதையும் கூறி மக் களை ஏமாற்றி வாக்குகளை அதிகரிப்பதற்கு எத்தனிப்பார்கள். அதைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர் களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுபோன்ற பாரதூரமான கருத் துக்களை தெரிவித்திருந்தால் அது தவறு. ஆனால், சம்பந்தன் போன்ற பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதி இவ்விதம் கருத்துக் களை தெரிவிப்பது தவறு என்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் இல்லையா? இளைப்பாறிய நீதியரசர் கள் இல்லையா? சட்டத்தரணிகள் இல்லையா? கல்விமான்கள் இல் லையா? அனுபவமிக்க அரசியல்வாதிகள் இல்லையா? அவ்விதம் இருக்கும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஏன் கொழும்பில் குடியிருக்கும் விக்னேஸ்வரனை தங்களின் முதன்மை வேட்பாள ராக தெரிவு செய்தது ஏன் என்று கேட்க விரும்புவதாக ஜனாதி பதி கேள்வி எழுப்பினார்.
புலி பயங்கரவாதிகள் வடபகுதியின் 82 அரசியல்வாதிகள், 52 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், நீலன் திருச்செல்வம் போன்ற 24 கல்விமான்களை படுகொலை செய்தனர். புலிகளின் இந்தக் குற் றங்களை செய்திருக்காவிட்டால் வடபகுதியில் பிறந்து, வடக்கில் நிரந்தரமாக வாழும் ஒருவரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது பிரதம வேட்பாளராக தெரிவு செய்திருக்க முடியுமென்றும் ஜனாதி பதி சொன்னார்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் சாதி, மத பூசல்களை ஏற்படுத்தக் கூடிய செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண் டும். இத்தகைய பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு இன, மத பூசல்களுக்கு நாம் தூபமிடலாகாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் பெளத்த வெறியர்கள் முஸ்லிம் பெண் களின் ஆடைகளை கிழித்தெறிந்து அப்பெண்களை மானபங்கப் படுத்தியிருக்கிறார்கள் என்று ஆதாரமற்ற பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய செய்திகள் உள்ளூரில் வெளிவந்தால் நாட்டில் பெரும் பிரச்சினை கள் ஏற்படும் என்பதை ஊடகவியலாளர்கள் உணர்ந்து மிகவும் அவ தானமாக நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் நாம் ஏற்படுத்தியது போன்ற அபிவி ருத்திப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது. அந் தளவுக்கு நாம் வடபகுதியை அபிவிருத்தி செய்துள்ளோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, இன்று யாழ்ப்பாணத்தில் விலைகள் மிகவும் குறைந்திருக்கிறது. இந்திய சேலைகள் குறைந்த விலைக்கு யாழ்ப் பாணத்தில் விற்கப்படுவதனால் பெண்கள் யாழ்ப்பாணத்திற்கு படை எடுக்கிறார்கள் என்றும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனின் மகள்மார் இரண்டு சிங்கள அரசியல்வாதிக ளின் புதல்வர்களை மணந்திருக்கிறார்கள். ஒரு மகள் இந்த திரும ணத்தின் மூலம் எனக்கு உறவுக்காரியாகிவிட்டார் என்றும் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் போர்த்துக்கேய ஆட்சியாளர்களுக்கு பின்னர் தமது அரசாங்கமே முதலாவது றோமன் கத்தோலிக்க தேவாலய த்தை சமீபத்தில் வாகரையில் நிர்மாணித்து சாதனையை ஏற்படுத் தியிருக்கிறதென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
போர்த்துக்கேயருக்கு பின்னர் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் றோமன் கத்தோலிக்க ஆல யங்களை கட்டாமல் கிறிஸ்தவ தேவாலயங்களையே கட்டினர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments:
Post a Comment