Sunday, September 08, 2013
இலங்கை::இராணுவத்தினர் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராகவே இருப்பதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை::இராணுவத்தினர் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராகவே இருப்பதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தி;ல் வெளிநாட்டுப் படையினருடன் இணைந்து முப்படையினரும் விசேட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்,
கொர்மோரன்ட் ஸ்ட்ரைக் 4' என்ற பெயரில் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 11 – 23ம் திகதி வரையில் இந்த விசேட பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
2698 முப்படையைச் சேர்ந்தவர்களும், 40 வெளிநாட்டுப் படையினரும் இந்த பயிற்சியில்ஈடுபடவுள்ளனர்.
கதிரவெளி, வாகரை, தொப்பிகல, நாரகமுல்ல மற்றும மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பயிற்சி தொடர்பில் அறிவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இராணுவத் தளபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பல்வேறு விசேட பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment