Thursday, September 5, 2013

பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்கவுள்ளது: வில்லியம் ஹேக்!

Thursday, September 05, 2013
லண்டன்::பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானியா பங்கேற்கவுள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய விவகாரங்கள் தொடர்பான செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவிக்கின்றார்.
 
பாராளுமன்ற அமர்வின்போது நேற்று கேட்கப்பட்ட கேள்வியொன்று பதிலளித்தபோதே வில்லியம் ஹேக் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

உண்மையில் இலங்கையில் நாம்  முன்னேற்றத்தை அவதானிக்கின்றோம்.  
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, மோதலின் பின்னர் இலங்கை மீள கட்டியெழுப்பபட்டுள்ளது.
 
அது மாத்திரமின்றி, ஊடக சுதந்திரத்தை உறுதி செய்தல், அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு செயற்படுதல் ஆகியன முன்னேற்றம் கண்டுள்ளன.
எனினும் அரசியல் கருத்தினை கொண்டுள்ள அனைத்து பிரிவினரும், இலங்கையின் ஜனநாயகத்திற்காக பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
 
அத்துடன் இலங்கையில் தொடர்ந்தும் நாம் காண வேண்டிய முன்னேற்றம் தொடர்பில் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டில் விடயங்களை ஆராய நாம் எண்ணியுள்ளோம்"

No comments:

Post a Comment