Tuesday, September 17, 2013
இலங்கை::முஸ்லிம்களின் உரிமைக்காக மறைந்த தலைவர் அஷ்ரபினால் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று அத்தலைவரின் கொள்கைக்கும் இலக்குக்கும் மாற்றமாக தற்போதைய தலைமையினால் வழிநடத்திச் செல்லப்படுகிறது.
இவ்வாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
நடைபெறவுள்ள வட மேல் மாகாண சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பில் போட்டியிடும் அமைப்பாளர் அப்துல் சாத்தாரை ஆதரித்து அதிபர் நஸார் தலைமையில் பண்டுகஸ்நுவரவில் நடைபெற்ற பொதுக் கூட்;டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட குறிப்பிட்டார்
அக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது தெரிவித்ததாவது,
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இந்நாட்டின் இறைமைக்கு என்றும் எதிராக இருந்ததில்லை. மாறாக இன ஒற்றுமையுடனும் சமூக ஒருமைப்பாட்டுடனுமே வாழ்ந்து வருகின்றனர் என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.
கிழக்கில் முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்றார்கள் என்பதற்காக நாட்டின் ஏனைய பிரசேங்களில் வாழும் முஸ்லிம்களை பாதிக்கின்ற வகையில் பொறுப்பற்ற கருத்துக்களை நாமும் நமது தலைமை அமைச்சர் அதாவுல்லாம் என்றும் தெரிவித்தில்லை.
எமது கருத்துக்கள் சகல பிரதேசங்களிலும் வாழும் முஸ்லிம்களைப் பாதுகாக்கும் வகையிலேயே அமையும் அதில் நாம் கவனமாக உள்ளோம்.
இருப்பினும் முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் மதச்சுதந்திரத்துக்கு அச்சுருத்தல் பேரினக்குழுக்களினால் ஏற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில்; நாம் வாய் முடியிருக்கவில்லை. பேச வேண்டிய இடத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
முஸ்லிம்களின் உரிமைக்காக மறைந்த தலைவர் அஷ்ரபினால் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று அத்தலைவரின் கொள்கைக்கும் இலக்குக்கும் மாற்றமாக வழிநடத்திச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது. இச்செயற்பாடானது முஸ்லிம் மக்கள் அனைவரையும் பெரும் ஆபத்தான நிலைக்குள் தள்ளிவிடும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
பெரும் தலைவர் மரணித்து இன்றுடன் 13 வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் அத்தலைவன் முஸ்லிம் சமூகத்துக்கு வெற்றுக் கொடுத்த உரிமைகளையும் அபிவிருத்திகளையும் தவிர, இன்றைய மு.கா.வின் தலைமையினால் எதைச் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்தல்களிலும் ஒவ்வொரு கோணத்தில் செயற்படும் இக்கட்சியினால் முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் இத்தகைய அரசியல் போக்கை வட மேல் மாகாண முஸ்லிம்கள் மிகவும் கவனத்துடன் உற்றுநோக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக போராடிய தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதக் கலாசாராம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் ஆனால,; முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றுதற்காக ஒவ்;வொரு கொள்கையை வகுத்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றைக் கூறி மக்களை ஏமாற்றும் நாடகத்தையே தொடர்ந்து நடத்தி வருகிறது.
அது மாத்திரமின்றி, இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவிபிள்ளையிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து எதுவும் கூறாத முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி வீரவசனம் பேசிகிறது. பேச வேண்டிய இடத்தில் பேசாது போன பஸ்ஸுக்கு கைகாட்டும் நிலையிலேதான் இக்கட்சி செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், குருநாகல் மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. இந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யபட வேண்டுமாயின் ஆளும் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தாக வேண்டும்.
இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள வட மேல் மாகாண சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்;தில் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளராக ஆளும் கட்சியில் போட்டியிடும் சத்தாருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதன்; மூலம் இப்பிரதேசத்தில் அபிவிருத்தியைக் காண முடியும் என்று நம்புகின்றேன்.
குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி ஆளும் கட்சியினூடாக வடமேல் மாகாணத்தில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை நிலை நிறுத்தவும் அப்பிரதிநிதித்துவத்தினூடாக இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய ஒன்றுபட்டு அனைவரும் சத்தாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.



No comments:
Post a Comment