Tuesday, September 17, 2013
இலங்கை::பிரபாகரனின் படத்துடன் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நால்வருக்கும் சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கொடிகாமம் பொலிஸாரால் கொடிகாமம் பகுதியில் வைத்து இராணுவத்தினரின் உதவியுடன் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டடிருந்தனர். இவர்களின் நால்வர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ததோடு, ஏனையவர்களை விடுதலை செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நடைபெற்றபோது பதில் நீதிவான் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கினார்.

No comments:
Post a Comment