Monday, September 30, 2013

இலங்கையின் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படும்: மீண்டும் புலிகளை உருவாக்கி ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு அரசாங்கமும் இடமளிக்காது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!

Monday, September 30, 2013
இலங்கை::அபிவிருத்தி பணிகளின் போது, வட மாகாணத்தின் புதிய நிர்வாகத்திற்கு அரசியலமைப்
பின் ஊடாக அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கத் தயாரென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வடக்கில் அரசாங்கத்துடன் தொடர்புபடாத மற்றுமொரு குழுவிற்கு வடக்கில் ஜனநாயக ரீதியில் நிர்வாக உரிமையை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு முன்னர் இவ்வாறு இருக்கவில்லை. எனவே வடக்கில் உள்ள நிர்வாகத்திற்கும் அரசியலமைப்பின் பிரகாரம் தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களைப் போன்று வடக்கிற்கும் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
 
ஆனால் அது அரசியலமைப்பிற்கு ஏற்ப இடம்பெற வேண்டும். மீண்டும் புலிகளை உருவாக்கி  ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு எந்தவொரு அரசாங்கமும் இடமளிக்காது என்று நான் நினைக்கிறேன். அதை நிறுத்துவதற்கு எமக்கு அதிகாரம் இருக்கின்றது.
 
இந்த நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகளையும் வட பகுதி மக்களுக்கு வழங்கும் உரிமை எமக்குள்ளது. அதேபோன்று கடந்த காலங்களிலும் அதனை வழங்கியுள்ளோம்..

No comments:

Post a Comment