Thursday, September 5, 2013

ஐ. நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் தவறான கருத்துக்கள்:சர்வதேச நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் அரசின் நடவடிக்கைகள் ஆரம்பம்: ரொட்னி பெரேரா!

Thursday, September 05, 2013
இலங்கை::ஐ. நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தனது இலங்கை விஜயத்தினைத் தொடர்ந்து வெளி யிட்டுள்ள கருத்துகளுக்கான உரிய விளக்கங்களை சர்வதேச நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் வேலை திட்டம் ஆரம் பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்தார்.
 நவநீதம்பிள்ளையின் கருத் துகளுக்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து உத்தியோகப்பூர்வ அறி க்கை அரசாங்க தகவல் திணைக் களத்தினால் வெளியிடப்பட்டுள் ளது. இதன் பிரதிகள் அனைத்து தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்க ப்பட்டுள்ளன எனவும் அவர் கூறி னார்.
மேலும் இலங்கை வந்திருந்த நவநீதம் பிள்ளை தான் தொடர்பு படாத விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளாரெனவும் அவர் சுட்டிக்காட்டினார். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசாங்க த்தினால் விடுக்கப்பட்ட அழைப் பின் பேரிலேயே அவர் இலங்கை வந்திருந்தார். இருப்பினும் அவரு க்கு வேண்டிய சகல வசதிகளை யும் இலங்கை அரசாங்கம் மேற் கொண்டிருந்ததுடன் அவர் விரும் பிய இடத்திற்கு செல்வதற் கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment