Tuesday, September 17, 2013

இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டு வருகிறது: இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம்!

Tuesday, September 17, 2013
கொல்கத்தா::இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டு வருகிறது: இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம்!

மனித உரிமை தீர்வு காணும் செயல்முறைகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும்  மற்றும் அவர்களின் பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் இலங்கை தூதர் கரியவாசம் தெரிவித்துள்ளார்.

இந்திய மகா போதி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஓன்றில் பங்கேற்ப்பதற்க்கு முன்பாக கொல்கத்தாவில் திங்கள்கிழமை தூதர் கரியவாசம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது அமைதி திரும்பி வருவதாக தெரிவித்தார்.தமிழின சமுதாயத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கும்,அவர்கள் எழுப்பும் பிரச்சனைகளுக்கும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போது இலங்கையில்  மனித உரிமை மீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.இலங்கையில் சீர்திருத்த பணிகள் நடைபெற்று வருவதாக கரியவாசம் தெரிவித்தார்

No comments:

Post a Comment