இலங்கை::முஸ்லிம்கள் நன்கு வியாபாரத்துறையில் மிகச் சிறப்பாக ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஆனால் அரசியல் துறையில் இன்னும் தெளிவு பெறாத நிலையில் தோல்வியுற்ற சமூகமாகவே உள்ளனர்.
இந்த ஜனாதிபதி நாட்டின் தலைவர், அதிக அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெறப் போவதும் ஆளும் பொது சன ஐக்கிய முன்னணிக் கட்சிதான்.
இந்த அரசாங்கம்தான் இன்னும் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்யப் போவகின்றது எனவே இந்நிலையில் தோல்வியடையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்களிப்பதில் எந்த விமோசனமுமில்லை.
எனவே நன்கு திறன்படச் சிந்தித்து அரசாங்கத் தரப்பில் போட்டியிடும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைப் பெற்றி பெறச் செய்ய முன்வருமாறு என்று அம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்கோள் விடுத்தார்.
பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் மதியாலைப் பிரதேசத்தில் பொது சன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரை ஆதரித்த நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில்,
30 வருட கால கொடூர யுத்தத்தில் முஸ்லிம்களுடைய வியாபார மற்றும் சமய நடவடிக்கைகள் என்பன பாரியளவு தடைபட்டுள்ளதை நாங்கள் நன்கு அறிவோம்.யுத்த நிறைவுக்குப் பிற்பாடு தங்களுடைய வியாபார சமய விவகாரங்கள் ந்வடிக்கைகைள் யாவும் சமூகமான முறையில் மிகவும் சிறப்பாகச் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கை பாரிய அபிவிருத்தி முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றன. வெளி நாட்டு தீய சக்திகள் இலங்கையில் இனங்களுடைக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு சதித் திட்டங்களை மேற்கொணடு வருகின்றன.
சமயங்களுக்கிடையே மதவாதப் பிரச்சினைகளை உண்டு பண்ணி ஒற்றுமையாக வாழுகின்ற மக்களைப் பிரித்து நாட்டின் இஸ்தீரத்தன்மையை இல்லாமற் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றார்கள். சிங்கள . தமிழ் , முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஒற்றுமையை சீர் குழைப்பதற்கு எமது நாட்டின் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு போதும் இடமளிக்கப் போவதுமில்லை.
குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழுகின்றனர். அவர்களுடைய தேவைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்தவற்கு உங்கள் மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே வேட்பாளர் அப்துல் சத்தாரை வெற்றிபெறச் செய்வதன் மூலமே உங்களது பிரதேசங்களுடைய கல்வித் தேவைகளையும் கிராம அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment