Friday, September 06, 2013
வேலூர்::முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2010–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20–ந் தேதி நளினி அறையில் ஜெயில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பயன்பாட்டில் உள்ள ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த வழக்கு வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
ந
ளினியின் அறையை ஆய்வு செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, நளினியின் அறையை பார்வையிட அனுமதியளித்தது.
இதனையடுத்து வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியின் அறையில் மாஜிஸ்திரேட்டு மும்மூர்த்தி, அரசு வக்கீல் கனிமொழி, நளினி வக்கீல் புகழேந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 30–ந்தேதி விசாரணைக்கு வந்தது. நளினி ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே நளினி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பு மறு தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கபட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் கோர்ட்டில் செல்போன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் நளினி நேரில் ஆஜர்படுத்தப்பட வில்லை.
இதற்கு மாற்றாக நளினி ஜெயிலில் இருந்த படியே வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டு நடவடிக்கைகளில் கலந்து கொள்கிறார்.
செல்போன் கைப்பற்றபட்ட வழக்கில் சாட்சிகளிடம் இன்று குறுக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

No comments:
Post a Comment