Sunday, September 15, 2013

இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பாளர்களுக்கும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடியிடுகின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!

Sunday, September 15, 2013
இலங்கை::இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பாளர்களுக்கும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடியிடுகின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று  இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் குழுவிற்கு தலைமைத் தாங்கும் இந்திய முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில்  122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் தலைமையக  தேர்தல் முறைப்பாட்டு பிரிவிற்கு இது தொடர்பில்  424முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது..
 
 
 

No comments:

Post a Comment