Wednesday, September 18, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வடக்கு மக்களை ஏமாற்றி வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த பிரச்சாரமும் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
23 ஆண்டுகளின் பின்னர் வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்தியதன் மூலமே அரசாங்கம் வெற்றியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் தரப்பினரைப் பயன்படுத்தி தேர்தல் மோசடிகள் செய்யப்படும் என அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment