Friday, September 13, 2013

இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல்கள் வழங்குவதை தள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி!!!

Friday, September 13, 2013
ஈரோடு::ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.எம். பழனிச்சாமியின் மகன் கவின் குமார்-சினேகா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா ஈரோடு பரிமளம் மகாலில் நடந்தது.

இதில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதுபற்றிய தமிழக மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரி ஷிண்டே ஆகியோரிடம் விளக்கமாக கூறி உள்ளேன்.

இலங்கை பிரச்சினை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு இந்திய போர்க்கப்பல்கள் வழங்குவது போன்ற கொள்கை முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகள் நியாயமானது என்று பிரதமரிடம் எடுத்து கூறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment