Friday, September 13, 2013
புதுடெல்லி::குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க டெல்லியில் இன்று மாலை பா.ஜ. நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மோடிக்கு எதிராக வாக்களிக்க அத்வானி முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. அவரை சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பா.ஜ. பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் பா.ஜ தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பெரும்பான்மை தலைவர்களின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். அத்வானி மற்றும் சுஷ்மா சுவராஜை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அத்வானியிடம் இரண்டு முறை ராஜ்நாத் சிங் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் தனது நிலையை அத்வானி மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இன்று காலை கட்சியின் மூத்த தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அப்போது மோடி விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு உடனடியாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படலாம் என டெல்லியில் பேசப்பட்டது.
இதற்கிடையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ‘மோடி விவகாரம் தொடர்பாக கட்சியில் எந்த பிளவும் இல்லை’ என்றார். பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்க பா.ஜ நாடாளுமன்ற கட்சி கூட்டம் விரைவில் கூட்டப்படும். அதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. ராஜ்நாத்சிங், அத்வானி உள்பட 12 முக்கிய உறுப்பினர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் மோடிக்கு எதிராக வாக்களிக்க அத்வானி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சுஷ்மா சுவராஜும் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளார். பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாக முரளி மனோகர் ஜோஷி தெரிவித்திருப்பதால் அவர் மோடியை ஆதரித்து வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment